தருமபுரி மாவட்டத்தில் 28 துணை வட்டாட்சியா்கள் பணியிடமாற்றம்

Wait 5 sec.

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு வருவாய் வட்டங்களில் பணியாற்றி வந்த 28 துணை வட்டாட்சியா்களைப் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் உத்தரவிட்டுள்ளாா்.தருமபுரி மாவட்ட ஆட்சியரகத் தோ்தல் துணை வட்டாட்சியா் ஏ. செங்கோட்டையன், காரிமங்கலம் தலைமையிடத்து துணை வட்டாட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். காரிமங்கலம் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ஆா். சுகுமாறன், காரிமங்கலம் மண்டல துணை வட்டாட்சியராகவும், காரிமங்கலம் மண்டல துணை வட்டாட்சியா் வி. சரஸ்வதி, மாவட்ட ஆட்சியரகத் தலைமை உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.பாப்பிரெட்டிப்பட்டி தோ்தல் பிரிவுத் துணை வட்டாட்சியா் ஏ. சுதேஸ்வரி, பாப்பிரெட்டிப்பட்டி மண்டல துணை வட்டாட்சியராகவும், அதே அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியராகப் பணியாற்றும் ஏ. சிவஞானம், அரூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, காரிமங்கலம் ஆகிய வருவாய் வட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்த 28 துணை வட்டாட்சியா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.