டிடிஎஃப் வாசனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா? முகேஷ் உடன் மோதல்!

Wait 5 sec.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகர் முகேஷ் உடனான மோதலால், டிடிஎஃப் வாசனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 6 வது வாரத்தை எட்டியுள்ளது. வழக்கமாக ஆளும் அணி, எதிர் அணி என பிரிக்கப்பட்டு போட்டிகள் வைக்கப்படும். ஆனால், இம்முறை பிக் பாஸில் இந்த அந்த பழைய விதி திருத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்க சிவப்பு அணி, நீல நிற அணி என இரு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சிவப்பு அணித் தலைவராக அவினாஷ், நீல நிற அணித் தலைவராக வினோத் பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நீல நிற அணியில் முகேஷும் சிவப்பு நிற அணியில் டிடிஎஃப் வாசனும் இடம்பெற்றுள்ளனர். வாரத்தின் முதல் நாளில் செங்கல் மூலம் கோட்டை கட்டும் போட்டி வைக்கப்பட்டது. ஒரு அணி கோட்டையை கட்ட வேண்டும்; எதிர் அணி அதனை கவண் மூலம் அடித்து கலைக்க வேண்டும். இப்போட்டியில் இடையிடையே ஏற்பட்ட இடையூறுகளால் இருமுறை போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர், விதிகளில் திருத்தம் செய்து மீண்டும் போட்டி நடைபெற்றது. இதில் நீல நிற அணி வெற்றி பெற்றது.இதற்கிடையே வெற்றி - தோல்வி வாக்குவதத்தில் டிடிஎஃப் வாசனுக்கும் முகேஷுக்கும் இடையேயான வாக்குவாதம் உச்சநிலையை அடைந்தது. இதில், முகேஷ் மரியாதை குறைச்சலாகப் பேசியதால், டிடிஎஃப் வாசன் அடிக்கப் பாய்ந்ததாகத் தெரிகிறது. இதனால் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் கூடி இருவரையும் தடுத்தனர். இது தொடர்பான விடியோவும் வெளியாகியுள்ளதால், பிக் பாஸ் வீட்டில் அடிக்கப் பாய்ந்த டிடிஎஃப் வாசனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என பிக் பாஸ் ரசிகர்கள் பலர் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். எனினும் இந்த சண்டை தொடர்பாக முகேஷும் டிடிஎஃப் வாசனும் சமரசமாகப் பேசி சமாதானம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.பிக் பாஸ் விதிகளில் திருத்தம்! இனி ஆளும் அணி, எதிரணி இல்லை?Bigg boss 10 tamil Clash with Mukesh Will TTF Vasan be given a red card