ஜஸ்ட் டயல்Q2 லாபம் 9.7 சதவீதம் சரிவு!

Wait 5 sec.

புதுதில்லி: முன்னணி தேடுபொறி நிறுவனமான ஜஸ்ட் டயல் லிமிடெட், நிதியாண்டின் 2வது காலாண்டில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.73 சதவீதம் சரிந்து ரூ. 107.8 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.கடந்த வருடம் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் நிறுவனம் ரூ. 119.44 கோடி நிகர லாபம் பதிவு செய்திருந்தது. இருப்பினும், கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ. 303.07 கோடியாக இருந்த ஜஸ்ட் டயலின் வருவாய், செப்டம்பர் வரையான காலாண்டில் இது 13.11 சதவீதம் அதிகரித்து ரூ. 342.82 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் 2வது காலாண்டில், அதன் மொத்த செலவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.6 சதவீதம் அதிகரித்து ரூ. 262.81 கோடியாக இருந்தது.முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் சில்லறை வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸுக்குச் சொந்தமான இந்நிறுவனம், 2027 நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் மொத்த வருமானத்தில் 5.6 சதவீதம் உயர்ந்து ரூ. 397.38 கோடியாக இருந்ததாகத் தெரிவித்துள்ளது.இன்றைய வர்த்தகத்தில், ஜஸ்ட் டயல் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கு, மும்பை பங்குச் சந்தையில் 2.82 சதவீதம் உயர்ந்து ரூ. 732.55 ஆக நிலைபெற்றது.Just Dial Ltd, has reported a decline of 9.73 per cent in its consolidated net profit.இந்திய எரிசக்தி நிறுவனத்தின் லாபம் ரூ. 554 கோடியாக உயர்வு!