அடுத்தடுத்து தோல்விப்படங்கள்... கவலையில் மாளவிகா மோகனன்?

Wait 5 sec.

மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தோல்வியடைந்துள்ளன. நடிகை நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட திரைப்படத்தில் அறிமுகமானாலும் மாஸ்டரில் நாயகியாக கவனம் பெற்றார். தொடர்ந்து தங்கலான், ஹிருதயப்பூர்வம் ஆகிய வெற்றிப் படங்களில் நடித்திருந்தார். இதனால், மலையாளம், தமிழிலும் முன்னணி நடிகையாக பிரபலமடைந்தார். நிறைய திரைப்பட வாய்ப்புகள் சென்றாலும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இந்த நிலையில், இந்தாண்டில் இவர் நடிப்பில் வெளியான ராஜா சாஃப், சர்தார் - 2 ஆகியவை தோல்விப்படங்களாகியுள்ளன. ஓரளவு கவனிக்கப்பட்ட இதயம் முரளி திரைப்படத்திலும் சிறப்பு தோற்றத்தில்தான் நடித்திருந்தார். ஹிருதய்ப்பூர்வம் திரைப்படத்திற்குப் பின் வெற்றி பெறாததால் மாளவிகாவின் ரசிகர்களும் ஏமாற்றத்தில் உள்ளனர்.அடுத்ததாக, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் பாக்கெட் நாவல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து வேறு திரைப்படங்களில் இன்னும் ஒப்பந்தமாகவில்லையாம்!ஆளே காணோம்... என்ன ஆனார் ரித்திகா சிங்? The films starring Malavika Mohanan have been flops.