வெற்றி மாறன் இயக்கிவரும் ராஜன் வகையறா திரைப்படத்தின் புரோமோ விடியோ தயாராகி வருகிறதாம். இயக்குநர் வெற்றி மாறன் ஒரே நேரத்தில் அரசன் மற்றும் ராஜன் வகையறா ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார். இரண்டும் வடசென்னை திரைப்பட உலகுடன் தொடர்புடைய கதை என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இதில், அரசனில் நடிகர் சிலம்பரசனும் ராஜன் வகையறா திரைப்படத்தில் கென் கருணாஸையும் நாயகனாக வைத்து இயக்கி வருகிறார். அரசன் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர இருந்தது. ஆனால், பணிகள் முடிவடையாததால் அடுத்தாண்டுக்குச் செல்கிறது. ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தீபாவளியன்று அரசன் திரைப்படத்தின் சிறப்பு புரோமோவும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், புதிய தகவலாக நடிகர் கென் நடித்து வரும் ராஜன் வகையறாவின் புரோமோவும் தயாராகி வருகிறதாம். இதனையும் தீபாவளியை முன்னிட்டு வெளியிடலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து தோல்விப்படங்கள்... கவலையில் மாளவிகா மோகனன்?The promo video for the film Rajan Vagiyaara, directed by Vetri Maran, is in the making.