வாழப்பாடி அருகே உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட ஸ்ரீ முத்துமலை முருகன் கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் பூரண கும்ப மரியாதை செலுத்தினர். பின்னர் எடப்பாடி பழனிசாமி ராஜகோபுர நுழைவு வாயிலைத் திறந்து வைத்தார். தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்தார். பின்னர் வருகிற 25ஆம் தேதி ராஜகோபுரம் கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலைக்கு சென்றார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முருகப்பெருமான் சாமி படம் வழங்கப்பட்டது. இதையடுத்து வெள்ளியில் வேல் வழங்கப்பட்டது. அதனைக் கையில் ஏந்திய படி யாகசாலை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, நாதஸ்வரத்தில் ஒலித்த முருகன் பக்திப் பாடலைக் கேட்டு, கண்ணை மூடிக்கொண்டு அப்படியே இசையோடு ஒன்றிவிட்டார்.இதில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி, ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயசங்கரன் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.On Friday, former Chief Minister Edappadi K. Palaniswami offered prayers at the Sri Muthumalai Murugan Temple near Vazhappadi, which houses the world's tallest 146-foot Murugan statue.பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து