வித்தியாசமான உலகம்..! மஞ்சணத்தி படப்பிடிப்பு பற்றி மனம் திறந்த கயாது லோஹர்!

Wait 5 sec.

நடிகை கயாது லோஹர் மஞ்சணத்தி படப்பிடிப்பு குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மாரி செல்வராஜ் குறித்து நெகிழ்ச்சியான விஷயங்களைக் கூறியுள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான பைசன் திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மஞ்சணத்தி படத்தை இயக்கி வருகிறார். மாரி செல்வராஜ் நவ்வி ஸ்டூடியோஸ் என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதில் மஞ்சணத்தி என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்தப் படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாது லோஹர், பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார்.கடந்த செப்டம்பரில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்ததாக இயக்குநர் தெரிவித்திருந்தார். தற்போது, நடிகை கயாது லோஹர் இன்ஸ்டாவில் கூறியிருப்பதாவது: ஒரு வித்தியாசமான உலகம். ஒரு வித்தியாசமான பள்ளி. வித்தியாசமான நான் மற்றும் என்னுடன் சிறிய விஷயங்களையும் வித்தியாசமாகப் பார்க்கக் கற்றுத்தந்த கதைசொல்லி. மஞ்சணத்தி முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது எனக் கூறியுள்ளார். View this post on Instagram ராமாயணாவின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!Kayadu Lohar pens note on wrapping Mari Selvaraj Manjanathi schedule: 'A storyteller who…'