ஆசிய பாரா விளையாட்டில் ஈட்டி எறிதலில் இந்தியா இரு பதக்கங்களை வென்றுள்ளது.மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான 5-ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அயிச்சி நகோயாவில் அக். 18 அன்று தொடங்கின.வரும் அக். 24-ஆம் தேதி நிறைவடையும் இந்தத் தொடரில் 45 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.பிரதீப் குமார் - வெள்ளிஇதில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F53/54 பிரிவில் இந்தியாவின் பிரதீப் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். பிரதீப் குமார் (F54) 27.45 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தனது தனிப்பட்ட சிறப்பான சாதனையைப் படைத்து இரண்டாம் இடம்பிடித்துள்ளார்.ஆயுஷ் வர்மா - வெண்கலம்இவரைத் தொடர்ந்து, ஆயுஷ் வர்மா (F53) வெண்கலப் பதக்கம் வென்று ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு இரட்டைப் பதக்கத்தை உறுதி செய்தார். ஒப்பீட்டளவில் அவர் 17.88 மீட்டர் என்ற குறைந்த தூரமே ஈட்டியை எறிந்தபோதிலும், உடல் குறைபாடுகளைக் கொண்டு கணக்கிடப்படும் ரசா புள்ளிகளின் அடிப்படையில் ஆயுஷுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. இப்போட்டியில், ஈரானின் எர்ஃபான் போண்டோரி, 30.24 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.நாளை (அக். 21) நடைபெறவுள்ள ஆடவர் குண்டு எறிதல் F53 இறுதிப் போட்டியிலும் ஆயுஷ் வர்மா போட்டியிடவுள்ளார்.F53 மற்றும் F54 பிரிவுகள் என்றால் என்ன?F53 வகை விளையாட்டு வீரர்களுக்கு பொதுவாக கைகளின் செயல்பாடு முழுமையாக இருக்கும். ஆனால் வயிற்றுத் தசைகள் மற்றும் கீழ் முதுகுத்தண்டு தசைகளின் செயல்பாடு குறைவாக இருப்பதால், அவர்களால் சமநிலையாக உட்கார முடியாது.F54 வகை வீரர்களுக்குக் கைகளில் மேல் தசையில் முழுமையான வலிமையும், உடலில் பகுதியளவு முதல் முழுமையான தசை வலிமையும் இருக்கும். ஆனால், நடு உடற்பகுதி மற்றும் கால்களின் இயக்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும்.இந்தியாவுக்கு 5-வது தங்கம்: ஆசிய பாரா விளையாட்டில் புதிய சாதனை படைத்த தீப்தி ஜீவன்ஜி!India has won two medals in javelin throw at the Asian Para Games.