இந்தியாவை உன்னத நிலைக்கு உயர்த்தும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்! நிதின் நவீன்

Wait 5 sec.

ராஷ்ட்ரிய சுயம்சேவக சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நிறுவன தினத்தை முன்னிட்டு, அனைத்து ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கும் பாஜக தலைவர் நிதின் நவீன் வாழ்த்துத் தெரிவித்தார். இதுதொடர்பாக நிதின் நவீன் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ஆர்எஸ்எஸ் நிறுவன தினத்தை முன்னிட்டு அனைத்து சுயம்சேவகர்களுக்கும் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். முதலில் தேசம் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, சங்கத்தின் சுயம்சேவகர்கள் சமூகத்தை ஒருங்கிணைக்கவும், இந்தியாவை அதன் உன்னத நிலையை நோக்கி அழைத்துச் செல்லவும் முழு அர்ப்பணிப்புடனும் உறுதிப்பாட்டுடனும் அயராது உழைத்து வருகின்றனர்.நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மேற்கொண்டு வரும் சேவைப் பணிகள், சமூகத்தில் சேவை, ஒத்துழைப்பு, சமூக பொறுப்புணர்வுகளை வலுப்படுத்துகின்றன. சேவை, ஒழுக்கம் மற்றும் தேசபக்தி ஆகியவை கொண்ட உன்னதமான பாரம்பரியம், வருங்கால சந்ததியினரிடையே தேச சேவை,தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வுகளை வளர்ப்பதன் மூலம் சேதத்தைக் கட்டமைக்கும் உறுதிப்பாட்டிற்குப் புதிய ஆற்றலைத் தொடர்ந்து வழங்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார். நூற்றாண்டைக் கடந்த ஆர்எஸ்எஸ்! பிரதமர் மோடி பாராட்டு!