விஜய் அண்ணா... முதல்வருடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்த தமிழக வீராங்கனை!

Wait 5 sec.

ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை பரணிகா முதல்வர் விஜய்யுடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.அந்தப் பதிவில், “முதல்வர் விஜய்யின் கனிவு இந்தத் தருணத்தை மேலும் சிறப்பானதாக மாற்றியது” எனக் கூறியுள்ளார். மேலும் விஜய் அண்ணா என அன்பாகவும் அதில் பதிவிட்டுள்ளார்.ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்திய அணி 85 பதக்கங்களுடன் நிறைவு செய்தது. அதில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள் பலரும் பதக்கம் வென்றிருந்தார்கள். குறிப்பாக போல் வால்ட் பிரிவில் பரணிகா இளங்கோவன் முதல்முறையாக இந்திய வரலாற்றில் இந்தப் பிரிவில் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். தமிழக வீரர், வீராங்கனைகளைப் பாராட்டி முதல்வர் விஜய் அவர்களுக்கு ஊக்கத்தொகையும் பரிசுப் பொருள்களையும் வழங்கி சமீபத்தில் கௌரவித்தார். இந்த நிகழ்வில் பரணிகா எடுத்த செல்ஃபி மற்றும் மற்ற புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வருக்கு நன்றி. அவரது கனிவினால் இந்தத் தருணம் மேலும் சிறப்பாக மாறியது. உங்களைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருந்தது விஜய் அண்ணா! உங்களின் வரவேற்பும் ஊக்கமும் ஆதரவும் மிகவும் முக்கியமானது. இந்தச் சிறப்பான மறக்க முடியாத தருணத்துக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன் என்றார். View this post on Instagram ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நோரா ஃபதேகியிடம் கொஞ்சி விளையாடிய ஆப்பிரிக்க குழந்தைகள்!This shows his kindness... Tamil Nadu sportswoman shares photos taken with Chief Minister Vijay!