நாக்பூரில் நடைபெற்ற ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு கால விஜயதசமி விழாவில் தலைவர் மோகன் பாகவத் ஆற்றிய உரையைப் பிரதமர் மோடி பாராட்டினார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்ட பதிவில், 1925ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று துவக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் இயக்கம், தேசக் கட்டமைப்பு, சமூக வேசைக்காக 100 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளது.ஆர்எஸ்எஸ் நிறுவன தினத்தை முன்னிட்டு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அயராத உழைப்பு, சேவை மனப்பான்மையின் மூலம் அமைப்பை வளர்த்த சிறந்த ஆளுமைகள் அனைவரும் எனது மரியாதைகள். மோகன் பாகவத்தின் உரை மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. அவர் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். தேச முன்னேற்றம், சமூக ஒற்றுமை, தன்னிறைவின் அவசியம் மற்றும் சமூகத்தின் நற்பண்புகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசியுள்ளார்.ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகரின் வாழ்விலும் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கும் சேவை மற்றும் தேசக் கட்டுமானம் ஆகியவற்றின் மீது அவர் காட்டிய முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது. மேலும், நேர்மறையான சமூக மாற்றத்திற்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்து 'பஞ்ச பரிவர்த்தன்' குறித்தும் அவர் எடுத்துரைத்தார் என மோடி பாராட்டியுள்ளார். வரும் காலங்களிலும் தேசத்தை மேலும் வலிமையாகவும், உறுதியுடனும் மாற்றும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது. எனக் குறிப்பிட்டார். ஆர்எஸ்எஸ் தனது நூற்றாண்டு விழாவின் நிறைவு ஆண்டையொட்டி, நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் வருடாந்திர விஜயதசமி விழாவை நடத்தியது.நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய மோகன் பகவத், ஆன்மிக பக்தி, சமூக நல்லிணக்கம் மற்றும் மத விழுமியங்களைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றிய சந்த் ரவிதாஸ், சுவாமி சிரத்தானந்தர் மற்றும் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி ஆகியோரின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்தார்.மழை நிலவரம்! சென்னையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!