வலு தூக்குதலில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை கஸ்தூரிக்கு ரூ. 50 லட்சம்: முதல்வர் அறிவிப்பு!

Wait 5 sec.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வலு தூக்குதலில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் புதன்கிழமை (அக். 21) அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியில், 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி தன்னம்பிக்கை, அயராத உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம் பெற்றுள்ள இம்மகத்தான வெற்றி, தமிழ்நாட்டின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். அவர் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியில், 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும்,… pic.twitter.com/HbF3hJTEZa— CMOTamilNadu (@CMOTamilnadu) October 21, 2026இந்தியாவுக்கு 10ஆவது தங்கம்..! நடப்பு எடிஷனில் 2 பதக்கம் வென்ற ஆயுஷ் வெர்மா!Chief Minister Vijay on Wednesday (Oct. 21) announced an incentive of Rs. 50 lakh for Tamil Nadu athlete Kasthuri Rajamani, who won silver in powerlifting at the Asian Para Games.