ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட்டின் நான்காம் நாளின் தொடக்கமே விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணி இன்று மட்டுமே 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நேற்றைய முடிவில் ஆஸி. அணி 1 விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில், இன்றைய தொடக்கமும் மோசமாக அமைந்துள்ளது.நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய ஸ்கட போலண்ட் இன்றைய முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன் தலா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து சொதப்பினார்கள்.தற்போது, ஸ்டீவ் ஸ்மித் - மாத்திவ் ரென்ஷா விளையாடி வருகிறார்கள். தென்னாப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென் 2, ககிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்க்யா தலா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள். தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 425/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ஆஸி. 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, 377 ரன்கள் பின்னிலையில் இருக்கிறது.முதல் டெஸ்ட்டில் வென்ற ஆஸி. தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட்டில் தெ.ஆ. வெல்லும் முனைப்பு காட்டி வருகிறது.இந்தியாவுக்கு 10ஆவது தங்கம்..! நடப்பு எடிஷனில் 2 பதக்கம் வென்ற ஆயுஷ் வெர்மா!Travis Head, Labuschagne are out of the game! Aussies are struggling after losing 4 wickets!