சென்னை புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு மிரட்டல்!

Wait 5 sec.

சென்னை புறப்பட தயாராகவிருந்த இண்டிகோ விமானத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அந்த விமானம் மீண்டும் தில்லிக்கே திரும்பியது. தலைநகர் தில்லியிலிருந்து இண்டிகோ விமானம் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் சென்னைக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. இதனிடையே இந்த விமானம் குறித்த மிரட்டல் செய்தி தொடர்பான அழைப்பு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்திலுள்ள கழிப்பறை ஒன்றில், விமானத்தைப் பறக்கவிடாதீர்கள்' என்று எழுதப்பட்ட செய்தி கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் செய்தி காகிதத்தில் எழுதப்பட்டிருந்ததா அல்லது கழிப்பறைச் சுவரில் எழுதப்பட்டிருந்ததா என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. விமானம் புறப்படுவதற்குத் தயாராக நகர்ந்துகொண்டிருந்த நிலையில், இந்த மிரட்டல் செய்தி கிடைத்ததையடுத்து, பாதுகாப்புச் சோதனைகளுக்காக விமானத்தை தனிமையான இடத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதேசமயம் விமானத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களும் உடனடியாகத் தெரியவரவில்லை.சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்! A Chennai-bound IndiGo plane received a threat message on Friday afternoon and the aircraft returned to the bay at the Delhi airport, according to sources.உ.பி.யில் மூன்றாவது முறையாக என்டிஏ ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல்