நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள “தகப்பன்” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கிடா படத்தின் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில், நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள புதிய படம் “தகப்பன்”. இப்படத்துக்கு, மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார். நடிகர் ஜீவா புதுமையான தோற்றத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், நடிகர்கள் ரஜிஷா விஜயன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், குழந்தை நட்சத்திரம் கேஷவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைகளை முன்னிட்டு “தகப்பன்” திரைப்படம் வரும் டிச.24 ஆம் தேதி வெளியாகும் என இன்று (அக். 23) படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏற்கெனவே, நடிகர் ஜீவாவின் நடிப்பில் இந்தாண்டு வெளியான “தலைவர் தம்பி தலைமையில்” எனும் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.ஆர்யா - நிகிலா விமலின் ஹலோ காதல்! முதல் பாடல் வெளியீடு! The release date of the film “Thagappan”, starring actor Jeeva, has been announced.