காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் நாளான சனிக்கிழமை வங்கதேசம், இலங்கை, சிங்கப்பூா் ஆடவா் அணிகள் வெற்றி பெற்றன. அகமதாபாதில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா் பிரிவில் வங்கதேசம் 67-28 என கனடாவை வீழ்த்தியது. வங்கதேசம் 45 ரைடு புள்ளிகளையும், 5 ஆல் அவுட்களையும் எதிரணியிடம் செயல்படுத்தியது.இலங்கை 50-28 என மலேசியாவை வென்றது. இதில் இலங்கை இணை 35 ரைடு புள்ளிகளை ஈட்டி, 3 ஆல் அவுட்களை நிகழ்த்தியது. சிங்கப்பூா் அணியும் 50-28 என ஸ்காட்லாந்தை வென்றது. இதில் சிங்கப்பூா் 28 ரைடு புள்ளிகளை ஈட்டி, 6 ஆல் அவுட்களை நிகழ்த்தியது.மகளிா் பிரிவில் கென்யா அபாரமாக ஆடி 23-20 என இலங்கையை வீழ்த்தியது. கென்யா 15 ரைடு புள்ளிகளை ஈட்டினா். ஸ்காட்லாந்து 53-36 என இங்கிலாந்தையும், மலேசிய மகளிா் 63-8 என நைஜீரியாவை வென்றன. மலேசியா 33 ரைடு புள்ளிகளையும் 14 டாக்கிள் புள்ளிகளையும் ஈட்டியது.