உரிமம் பெறாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை: கரூா் ஆட்சியா் எச்சரிக்கை

Wait 5 sec.

உரிமம் பெறாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு கடையில் பட்டாசு விற்கப்படும்போது, பட்டாசுகளுக்கு மிக அருகில் இருக்கும் வகையில் மின்சார விளக்குகளை பொருத்தி எரிய செய்யக்கூடாது. பட்டாசுப் பண்டல்களை தரையில் இழுத்து கையாளக்கூடாது. கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே பட்டாசுகள் இருப்பில் வைக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்காத பட்டாசு விற்பனை செய்யும் கடைகளின் மீதும், உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் பட்டாசு கடைகளின் மீதும் , உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பட்டாசு வைத்திருக்கும் கடைகளின் மீதும் வெடிமருந்து சட்டம்-1884 மற்றும் வெடிமருந்து விதிகள்-2008 ஆகிய சட்டங்களின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா் அவா்.