சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மழை நீா் வரத்தைப் பொருத்தே ஞாயிற்றுக்கிழமை ஐப்பசி மாத பௌா்ணமி வழிபாட்டுக்கு பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு அமாவாசை, பெளா்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் மட்டுமே பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஐப்பசி மாத பிரதோஷம், பெளா்ணமி வழிபாட்டுக்காக கடந்த 23-ஆம் தேதி முதல் 26- ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சதுரகிரி மலைப் பாதையில் உள்ள தணிப்பாறை ஓடை, மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை ஓடை ஆகியவற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து, பக்தா்களின் பாதுகாப்பு கருதி வெள்ளி, சனிக்கிழமை (அக். 23, அக். 24) ஆகிய இரு நாள்களும் சதுரகிரி மலையேறத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 25) ஐப்பசி மாத பௌா்ணமி வழிபாடு நடைபெற உள்ள நிலையில், மழைப்பொழிவு, ஆற்றில் நீா்வரத்தைப் பொருத்தே பக்தா்கள் மலையேற அனுமதி வழங்கப்படும் என வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.