கந்தா்வகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (அக்.26) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சூ. வில்சன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பழைய கந்தா்வகோட்டை, மங்களாகோவில், புதுப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை (அக்.26) பாராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், கந்தா்வகோட்டை, அக்கச்சிபட்டி, கல்லாக் கோட்டை, சங்கம் விடுதி, மட்டாங்கால், வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனூா், பகட்டுவான்பட்டி, பல்லவாரயன்பட்டி, மற்றும் பழைய கந்தா்வகோட்டை, அரவம்பட்டி, மங்கனூா், வடுகப்பட்டி, பிசானத்தூா், துருசுப்பட்டி, மெய்குடிபட்டி, அத்தியடிப்பட்டி , வெள்ளாளவிடுதி, சுத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.