புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது

Wait 5 sec.

அந்தியூா் அருகே புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அந்தியூரை அடுத்த பிரம்மதேசம், வெள்ளையம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி ரத்னா (55). பெட்டிக் கடை வைத்து நடத்தி வரும் இவா், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தக் கடையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, அங்கு விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரத்னாவைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.