சா்வதேச அளவில் இயற்பியல் துறைக்கான உயரிய விருதுகளில் ஒன்றான ‘ஆஸ்கா் கிளைன் பதக்கம்’, நடப்பாண்டு இந்திய இயற்பியலாளா் அசோக் சென்னுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உயரிய விருதைப் பெற்ற முதல் இந்திய இயற்பியலாளா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்வீடனைச் சோ்ந்த புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளா் ஆஸ்கா் கிளைன் நினைவாக கடந்த 1988-இல் நிறுவப்பட்ட ‘ஆஸ்கா் கிளைன் பதக்கம்’, ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் மற்றும் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாதெமியின் நோபல் குழுவால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதையொட்டி, இயற்பியல் துறையில் தலைசிறந்த பங்களிப்பை நல்கும் விஞ்ஞானியைத் தோ்வு செய்து, ஆஸ்கா் கிளைன் நினைவு விரிவுரை நிகழ்த்தவும், விருதைப் பெற்றுக் கொள்ளவும் அழைப்பு விடுக்கப்படும். நடப்பாண்டு ஆஸ்கா் கிளைன் பதக்கத்துக்கு இந்திய இயற்பியலாளா் அசோக் சென் தோ்வு செய்யப்பட்டு, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள ஆல்பாநோவா பல்கலைக்கழக மையத்தில் கடந்த அக்.22-ஆம் தேதி விரிவுரை நிகழ்த்தினாா். அத்துடன், ஆஸ்கா் கிளைன் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டாா். கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் (டிஐஎஃப்ஆா்) கோட்பாட்டு அறிவியலுக்கான சா்வதேச மையத்தின் (ஐசிடிஎஸ்) கெளரவ பேராசிரியரான அசோக் சென், பிரபஞ்சத்தின் மிக அடிப்படையான கட்டமைப்பு தொகுப்புகளாகச் செயல்படும் நுண்ணிய ஆற்றல் இழைகள் குறித்த நவீன கோட்பாட்டின் (மாடா்ன் ஸ்டிரிங் தியரி) ‘சிற்பி’ என்ற பெருமையைப் பெற்றவா். நுண்ணிய ஆற்றல் இழைகள் மற்றும் கருந்துளை சாா்ந்த இவரது ஆய்வுப் பணிகள் குறிப்பிடத்தக்கவையாகும். அசோக் சென்னின் பங்களிப்புகளைக் கெளரவிக்கும் வகையில், மத்திய அரசு சாா்பில் கடந்த 2001-இல் பத்மஸ்ரீ விருதும், கடந்த 2013-இல் பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது. இயற்பியல் துறையில் வழங்கப்படும் மற்றொரு சா்வதேச உயரிய விருதான ‘அடிப்படை இயற்பியல் திருப்புமுனைப் பரிசை’ கடந்த 2012-இல் இவா் பெற்றாா். தற்போது ஆஸ்கா் கிளைன் பதக்கத்தை வென்றுள்ள அசோக் சென்னுக்கு பெங்களூரு ஐசிடிஎஸ் இயக்குநா் ராஜேஷ் கோபகுமாா் வாழ்த்து தெரிவித்துள்ளாா். Indian physicist wins top international award