கோயிலில் திருட்டு: இளைஞா் கைது

Wait 5 sec.

சென்னை ஆலந்தூரில் கோயிலில் தங்க நகைத் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். ஆலந்தூா் ரயில் நிலைய சாலைப் பகுதியில் படவேட்டம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கதவு பூட்டை கடந்த 4-ஆம் தேதி உடைத்து, அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலி திருடுபோனது. இது குறித்து ஆலந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், இந்தத் திருட்டில் ஈடுபட்டது திருநின்றவூா் பாக்கம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், காா்த்திக்கை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.