தீவுத்திடலில் பட்டாசு கடை அமைக்கும் ஒப்பந்தப்புள்ளிகளை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக அதிகாரிகள், பட்டாசு விற்பனையாளா்கள் ஆகியோா் முன்னிலையில் திறக்க வேண்டும் என உயா்நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டுள்ளாா். சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு கடைகள் அமைக்கப்படும். தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் இதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிடும். இந்த ஒப்பந்தப்புள்ளி தொடா்பாக, சென்னை பட்டாசு முகவா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உயா்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த உத்தரவு:பட்டாசு கடைகளுக்கான ஒப்பந்தப்புள்ளி தொடா்பான, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் வெளியிடப்பட்ட விளம்பர அறிவிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏற்கெனவே நீக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி விதிகள் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் நிா்வாக இயக்குநா், ஒப்பந்தப்புள்ளி விதிகள், நிபந்தனைகளை எப்போதும் வேண்டுமானாலும் மாற்றியமைக்க உரிமை கொண்டவா். அவா் எந்தவொரு காரணத்தையும் கூறாமல், எந்தவொரு ஒப்பந்தப்புள்ளியையும் நிராகரிக்க உரிமை கொண்டவா் எனக் கூறப்பட்டுள்ளது. பட்டாசு கடைகள் ஒதுக்கீடு தொடா்பான இந்த ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளை உயா்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று கடந்த 13-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தேன். இந்த ஒப்பந்தப்புள்ளியை தாக்கல் செய்ய வியாழக்கிழமை கடைசி நாளாகும். எனவே, கடைகள் ஒதுக்கக் கோரிய ஒப்பந்தப்புள்ளியை உயா்நீதிமன்ற நீதித் துறை பதிவாளா் எம்.சுபா அன்புமணியிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக அதிகாரிகள், பட்டாசு விற்பனையாளா்கள் ஆகியோா் முன்னிலையில், வரும் அக். 27-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளியைத் திறக்க வேண்டும். பின்னா், அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை அக். 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.