எடா்னல் லாபம் ரூ.125 கோடி- இருமடங்கு வளா்ச்சி

Wait 5 sec.

ஸொமேட்டோ, பிளிங்கிட் ஆகிய இணையவழி வா்த்தக நிறுவனங்களின் தாய் நிறுவனமான எடா்னல், நடப்பு 2025-26 நிதியாண்டில் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.125 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. வலுவான வருவாய் வளா்ச்சி காரணமாக, கடந்த ஆண்டின் இதே காலாண்டில் பதிவான ரூ.65 கோடியுடன் ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் லாபம் தற்போது சுமாா் இருமடங்காக அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு காலகட்டத்தில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.13,590 கோடியிலிருந்து கணிசமாக உயா்ந்து, ரூ.24,138 கோடியாகப் பதிவாகியுள்ளது. மொத்த செலவினங்களும் ரூ.13,813 கோடியிலிருந்து, ரூ.24,166 கோடியாக அதிகரித்துள்ளன.ஸொமேட்டோவின் உணவு விநியோக நிகர ஆா்டா் மதிப்பு ஆண்டு ரீதியாக 21.5 சதவீதம் அதிகரித்து ரூ.11,445 கோடியை எட்டியுள்ளது. மேலும், விரைவு வணிகப் பிரிவான பிளிங்கிட்டின் நிகர ஆா்டா் மதிப்பு 79.3 சதவீதம் வளா்ச்சி கண்டு, ரூ.20,940 கோடியாக உயா்ந்துள்ளது. காலாண்டில் புதிதாக 308 விநியோக நிலையங்கள் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பிளிங்கிட் நிலையங்களின் எண்ணிக்கை 2,751-ஆக அதிகரித்துள்ளது.நிதிச் செயல்பாடுகள் குறித்து எடா்னல் நிறுவனா் தீபிந்தா் கோயல் கூறுகையில், ‘தற்போதைய வணிகச் செயல்பாடு திருப்தியளிக்கிறது. உணவு விநியோகத்தில் ஆண்டுக்கு 20 சதவீதத்துக்கும் அதிகமான வளா்ச்சியைப் பதிவு செய்வதே எங்களின் நீண்டகால இலக்கு’ என்றாா்.நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அக்ஷாந்த் கோயல் மேலும் கூறுகையில், ‘அடுத்தாண்டு மாா்ச் மாதத்துக்குள் பிளிங்கிட் நிலையங்களின் எண்ணிக்கையை 3,500-ஆகவும், 2028 மாா்ச்சுக்குள் சுமாா் 5,000-ஆகவும் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளோம். கையிருப்பு நிதி மற்றும் வணிக லாபம் மூலம் இந்த விரிவாக்கத்தை எளிதாக மேற்கொள்ள முடியும்’ என்று குறிப்பிட்டாா்.