எஸ்பிஐ வங்கியின் 3.75 லட்சம் தரவுகள் திருட்டு! ‘டார்க் வெப்’பில் வெளியீடு!

Wait 5 sec.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மீது இணையவழித் தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத ஹேக்கர் குழு, 3.75 லட்சம் தரவுகளை திருடப்பட்டு ’டார்க் வெப்’பில் வெளியிட்டுள்ளது.இந்த தாக்குதலை உறுதி செய்துள்ள எஸ்பிஐ, இதன்விளைவாக வாடிக்கையாளர்களின் அன்றாட சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று விளக்கம் அளித்துள்ளது.'சிரியூசிம்' என்ற பெயரில் செயல்படும் அடையாளம் தெரியாத ஹேக்கர் குழு ஒன்று, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள், கடன் விண்ணப்பங்கள் மற்றும் கணக்குத் தொடக்க ஆவணங்கள் உள்ளிட்ட ரகசிய தகவல்களை திருடியுள்ளதாக டார்க் வெப்பில் வெளியிட்டுள்ளது.சைபர் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடும் சைபர்பல்ஸ் தெரிவித்திருப்பதாவது, எஸ்பிஐ-யின் சுமார் 3.80 லட்சம் தரவுப் பதிவுகளை சிஎஸ்வி (CSV) வடிவத்திலும், 2,722 தரவுகளை பிடிஎஃப் (PDF) வடிவத்திலும் அந்தக் குழு திருடியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கசிந்த விவரங்களில் வாடிக்கையாளர்களின் பெயர்கள், பதிவுசெய்யப்பட்ட கைபேசி எண்கள், பிறந்த தேதிகள், பாலினம், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் வசிப்பிட முகவரிகள், கிளை அடையாளங்கள் போன்றவையும் அடங்கியுள்ளது.இந்த செய்தியை உறுதி செய்துள்ள எஸ்பிஐ நிர்வாகம், ”டார்க் வெப்பில் வாடிக்கையாளர்கள் தரவுகள் கசிந்தது தொடர்பான தகவல் கிடைத்தது. முதல்கட்ட பகுப்பாய்வில் எஸ்பிஐ தொடர்பான சுமார் 3.75 லட்சம் பதிவுகள் டார்க் வெப்பில் இருப்பது தெரியவந்துள்ளது.இதில், 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களுடன் கூடிய பதிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சைபர் பாதுகாப்பு ஏஜென்சி மற்றும் இந்திய கணினி அவசரகால கட்டுப்பாட்டுக் குழு ஆகியவற்றிடமிருந்து அக்டோபர் 16 அன்று தகவல்கள் கிடைத்தன.உடனடியாக தடுப்பு நெறிமுறைகள் செயல்படுத்தப்பட்டன. சைபர் வல்லுநர்கள் குழுவின் விசாரணையும் ஆய்வும் தொடங்கியுள்ளன.இந்தச் சம்பவம் வங்கியின் முக்கிய செயல்பாடுகள், நிதி செயல்திறன் அல்லது வணிகத் தொடர்ச்சி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.3.75 lakh data of SBI Bank stolen - Published on the dark webதொடர்ந்து குறையும் தங்கம் விலை: அக். 21 நிலவரம்!