ஏ. ஆர். ரஹ்மான், அனிருத், ஜிவி பிரகாஷ் பங்களிப்பில் ராவணன் தாண்டவம் !

Wait 5 sec.

ராமாயணா திரைப்படத்தில் இடம்பெற்ற ராவணன் தாண்டவன் பாடல் வெளியாகியுள்ளது. இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பிர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகியுள்ள ராமாயணா வருகிற நவ. 5 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.ராமாயணத்தைத் தழுவி பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் அதிக பொருள்செலவில் உலகின் முன்னணி விஎஃப்எக்ஸ் நிறுவனங்களின் பங்களிப்பில் ஆச்சரியப்படும் வகையில் இந்த ராமாயணா உருவாக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ராவண தாண்டவம் பாடலை வெளியிட்டுள்ளனர். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இளங்கோ கிருஷ்ணன் எழுதிய இப்பாடலை ஜிவி பிரகாஷும் அனிருத்தும் இணைந்து பாடியுள்ளனர். The song Ravana Thandavan from the movie Ramayana has been released.