வானிலை: சென்னை, 26 மாவட்டங்களில் பகல் 1 வரை மழை! (அக். 21)

Wait 5 sec.

சென்னை உள்பட 27 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.குறிப்பாக, சென்னை, புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை முதல் விடியவிடிய கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் மழை பொழிவு பதிவாகியுள்ளது.இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி, அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, காரைக்கால், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பகல் 1 மணிவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ts nowcast @ 1000 hrs IST pic.twitter.com/DSHwFl98Tn— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) October 21, 2026Weather: Rain in Chennai, 26 districts till 1 pm - Oct. 21வானிலை: சென்னை, புறநகரில் இன்று மழை எப்படி இருக்கும்?