சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்துக்கான மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு அரசின் எல்-நினோ நிபுணர் குழு உறுப்பினர் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை முதல் விடியவிடிய பரவலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது.இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்துக்கான மழை நிலவரம் குறித்து பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:"மேகக்கூட்டங்கள் வடக்கு நோக்கி பொன்னேரி - புலிக்காடு பகுதிக்கு நகர்ந்துள்ளதால், பகல் நேரத்தில் சென்னை முழுவதும் மழைப்பொழிவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.பகல் நேரத்தில் வெய்யில் வரக்கூடும். அதே நேரத்தில் ஆங்காங்கே மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. இன்றிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.Weather: How will the rain be in Chennai and its suburbs today?சென்னையில் விடியவிடிய மழை! மீனம்பாக்கத்தில் 129 மி.மீ. பதிவு!