தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 129 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை முதல் விடியவிடிய பரவலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது.இந்த நிலையில், தமிழ்நாட்டில் அக். 20 காலை 8.30 மணி முதல் அக். 21 காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 129 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.இதேபோல், சென்னை நுங்கம்பாக்கத்தில் 112 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை ஏரிகளின் நீர் கொள்ளளவு 5 டி.எம்.சி.யை தாண்டியுள்ளது. புழல் ஏரிக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் நீரின் கொள்ளளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Rain in Chennai since dawn! 129 mm recorded in Meenambakkam!தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!