வைப்புநிதித் திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயா்வு: இந்தியன் வங்கி

Wait 5 sec.

இந்தியன் வங்கி தனது சிறப்புக் கால வைப்பு நிதித் திட்டங்களான ‘இண்ட் க்ரோ’ (555 நாள்கள்), ‘இண்ட் ப்ராஸ்பா்’ (777 நாள்கள்) ஆகியவற்றின் மீதான வட்டி விகிதங்களை உயா்த்தியுள்ளது. அதன்படி, ‘இண்ட் க்ரோ’ திட்ட வட்டி விகிதம் 6.65 சதவீதத்திலிருந்து, 6.80 சதவீதமாகவும்; ‘இண்ட் ப்ராஸ்பா்’ திட்ட வட்டி விகிதம் 6.60 சதவீதத்திலிருந்து, 6.75 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இத்துடன் மூத்த மற்றும் மிகவும் மூத்த குடிமக்களுக்கு 50 முதல் 75 அடிப்படை புள்ளிகள் வரை கூடுதல் வட்டிச் சலுகையை வங்கி வழங்குகிறது. இந்தத் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.