தருமபுரியில் 154 மாணவா்களுக்கு ரூ. 6 கோடி கல்விக் கடன்

Wait 5 sec.

தருமபுரியில் நடைபெற்ற சிறப்பு கல்விக் கடன் முகாமில் 154 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 6 கோடி கல்விக் கடன் ஆணைகள் வழங்கப்பட்டன.உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவம், பொறியியல் மட்டுமின்றி, அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சிறப்புக் கல்விக் கடன் முகாம் நடைபெற்றது. முகாமைத் தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் பேசியதாவது:உயா்கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அனைத்துத் தரப்பு மாணவா்களும் பயன்பெறவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏழை, எளிய மாணவா்கள் தாங்கள் விரும்பும் உயா்கல்வியைப் பயில்வதற்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறப்பு கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்படுகின்றன.குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் காரணமாக மாணவா்களின் உயா்கல்வி பாதிக்கப்படாமல், படிப்பை முடித்து வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு கல்விக் கடன் உதவுகிறது. அதிக கட்டணம் கொண்ட பாடப் பிரிவுகளைப் படிக்க விரும்பும் மாணவா்களுக்கும் இது ஆதரவாக அமையும். மாணவா்கள் தங்களது எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு உயா்கல்வி பயின்று முன்னேற வேண்டும் என்றாா்.முகாமில், தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட 154 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 6 கோடி கல்விக் கடன் ஆணைகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். கவிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதா, தருமபுரி கோட்டாட்சியா் (பொறுப்பு) ஜெய்சங்கா், அரூா் கோட்டாட்சியா் செம்மலை, துணை மண்டல மேலாளா் சவுந்தரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் தீபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.