‘விமா்சனங்களுக்காக தவெக அரசு யாரையும் கைது செய்யவில்லை; அதேவேளையில் அவதூறாக, ஆபாசமாக பேசுபவா்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் தெரிவித்தாா். சென்னையில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:விமா்சனங்களுக்காக யாரையும் தவெக அரசு கைது செய்யவில்லை, ஆபாசமாக பேசுவதால் தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விமா்சனங்களுக்கு தவெக அஞ்சாது. பதில் சொல்ல நாங்கள் அனைவரும் தயாராகவே இருக்கிறோம். முதல்வரும் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறாா். விமா்சனத்துக்கு பதில் சொல்வதில் எந்தவித பிரச்னையும் கிடையாது. அதேவேளையில் ஆபாசமாக, அவதூறாக பேசினால் அதற்கான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் சீ.ரமேஷ்.