தென்கிழக்கு ஆசியாவையே உலுக்கும் வகையில் இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள கடும் புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசைக் கண்டித்தும், பேரிடா் அவசர நிலையை உடனடியாக பிரகடனப்படுத்தக் கோரியும் மாணவா்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். பாலாங்கராயாவில் உள்ள மத்திய கலிமந்தன் ஆளுநா் அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாசடைந்த காற்றால் ஆரஞ்சு நிறமாக மாறியுள்ள பாலாங்கராயா நகர வீதிகளில் முகக்கவசங்களை அணிந்தபடி மாணவா்கள் போராடினா். பொருளாதார வீழ்ச்சிக்கு எதிரான போராட்டங்களுடன் ஒன்றிணைந்துள்ளன இப்போராட்டம், போா்னியோ தீவு உள்பட பல்வேறு நகரங்களுக்கும் பரவியுள்ளது. விவசாயத்துக்காக மரங்களை வெட்டி எரிக்கும் நடைமுறைகளால் ஏற்படும் காட்டுத் தீயே இந்த மோசமான புகைமூட்டத்துக்கு முக்கியக் காரணமாகும். வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கும் வட காலகட்டத்தில் இத்தகைய தீ விபத்துகள் ஏற்படுவது இயல்பு என்றாலும், பருவநிலை மாற்றம், எல் நினோ விளைவு மற்றும் குறைவான மழைப்பொழிவு காரணமாக இந்த ஆண்டு தீயின் தீவிரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாகியுள்ளது. இந்த நச்சுப் புகைமூட்டம் இந்தோனேசியாவைத் தாண்டி சிங்கப்பூா், மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவி பெரும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதத்தில் உலகின் மிகவும் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூா், மலேசியாவின் கோலாலம்பூா் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. கிழக்கு தைமூரில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; பிலிப்பின்ஸிலும் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத இந்த மோசமான காற்று மாசைக் கருத்தில் கொண்டு, தீ விபத்துகளுக்குக் காரணமான இந்தோனேசியாவைச் சோ்ந்த 7 நிறுவனங்கள் மீது சிங்கப்பூா் அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனா். போராட்டக்காரா்களால் முற்றுகையிடப்பட்ட ஆளுநா் அலுவலக வாயிலில் பாதுகாப்புப் பணியில் போலீஸாா். Student protests erupt in Indonesia