பேட்மிண்டனில் வெள்ளி வென்ற சிவராஜன் சோலைமலைக்கு ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை!

Wait 5 sec.

ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற  இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சிவராஜன் சோலைமலைக்கும் முதல்வர் சி. ஜோசப் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.இது குறித்து, முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:”ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அந்த அவணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சிவராஜன் சோலைமலைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். வீரர் சிவராஜன் சோலைமலையின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.தமிழ்நாட்டின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு புதிய ஊக்கத்தை அளித்திடும் வகையில் அவரது வெற்றி அமைந்துள்ளது. வீரர் சிவராஜன் சோலைமலை, மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.Sivarajan Solaimalai won a silver medal in badminton at the Para Asian Games.ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற பரணிகாவுக்கு ரூ. 30 லட்சம்: முதல்வர் விஜய் அறிவிப்பு!வலு தூக்குதலில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை கஸ்தூரிக்கு ரூ. 50 லட்சம்: முதல்வர் அறிவிப்பு!