4,900 மெகாவாட் மின்சாரம்! 4-ஆவது குறுகிய கால டெண்டர் வெளியிட்ட தமிழக அரசு!

Wait 5 sec.

தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக வெளிச் சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக குறுகிய கால டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.மாநிலத்தில் மின் தேவையை பூா்த்தி செய்ய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், கூடுதலாக மின்சாரம் வாங்கும் நடவடிக்கையில், தமிழ்நாடு மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளது.கடந்த அக். 15-ஆம் தேதி முதல் வரும் 31-ஆம் தேதி வரை தினமும் 1,500 மெகாவாட் மின்சாரம் வாங்க, சில நிறுவனங்களிடம் அண்மையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பல மாவட்டங்களில் மழை பெய்வதால், மின் தேவை சற்று குறைந்துள்ளது. இதனால் மின் கொள்முதலும் குறைந்துள்ளது.அக்டோபர் மாத தேவைக்காக 4,500 மெகாவாட், 2027 பிப்ரவரி - ஜூலை இடையிலான தேவைக்கு 1,500, 2026 நவம்பர் - 2027 மே வரையிலான மாலை நேர மின் தேவையைச் சமாளிப்பதற்காக மாதத்துக்கு 1,000 மெகாவாட் என மொத்தம் 7,000 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு 3 குறுகிய கால டெண்டர் கோரப்பட்டது.இந்த நிலையில், 2026 நவம்பர் - 2027 ஜனவரி இடையிலான மின் தேவைக்காக 4,900 மெகாவாட் மின்சாரத்தை வெளிச் சந்தையில் கொள்முதல் செய்ய 4-ஆவது குறுகிய கால டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.ஸ்வீட் எடு, கொண்டாடு! குழந்தைகள் நாளில் 62.4 லட்சம் மாணவர்களுக்கு கேக் வழங்குகிறது தமிழக அரசு!4,900 MW of electricity: Tamil Nadu government issues 4th short-term tender