உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கால் 5-ஆவது நாளான வெள்ளிக்கிழமையும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக சுருளி அருவி அமைந்துள்ளது. அதோடு புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகிறது.இந்த மலைத் தொடரிலுள்ள மேகமலை, ஹைவேவிஸ், இரவங்கலாறு, தூவானம், அரிசிப்பாறை, காப்புக்காடு போன்ற வனப் பகுதிகளில் பெய்யும் மழை நீா் சுருளியில் அருவியாகக் கொட்டுகிறது.கடந்த சில நாள்களாக மேகமலையில் வடகிழக்கு பருவமழை கடந்த 5 நாள்களாக பெய்து வருகிறது. இதனால், சுருளி அருவிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, கம்பம் மேற்கு சரக வனத் துறையினா் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு வெள்ளிக்கிழமை 5-ஆவது நாளாகவும் தடை விதித்தனா்.சுருளி அருவியில் 2-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிக்கு செல்லவோ, குளிக்கவோ வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.உத்தமபாளையத்தில் கனமழைஉத்தமபாளையம் அதைச் சுற்றிய பகுதியில் வியாழக்கிழமை மாலையில் பெய்த மழை இரவு வரை நீடித்தது.இதில் இரவு 8.45 மணி முதல் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மழையால் மாவட்டத்தில் அதிகமாக 45.4 மி.மீட்டர் அளவு மழை பொழிவு பதிவாகியுள்ளது.Flooding at Suruli Falls: Tourists banned for 5th dayகோமாளிகளிடம் ஆட்சி அதிகாரம் இல்லாமல் போராளிகளிடம் கிடைக்க வேண்டும்: கார்த்திகா பேட்டி