திருச்சி அருகே பயிர்க்கடன் தள்ளுபடிகோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டது குறித்து தவெக அரசுக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நயினார் நாகேந்திரனின் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "போராடும் விவசாயிகளை ஒடுக்கிவிட்டால், பிரச்சினைகள் தீர்ந்து விடுமா முதல்வர் விஜய் அவர்களே? திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த இருங்களூர் அருகே, தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதியின் படி பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி, அமைதியான வழியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற 252 விவசாயிகளை உங்கள் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டீர்கள். ஆனால், அந்த அநியாயத்தை தட்டிக் கேட்பவர்களை மட்டும் தடாலடியாக கைது செய்வீர்களா? என்ன விதமான பாசிசப் போக்கு இது? உங்கள் நிர்வாகத் திறனின்மையை மறைக்க, போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது தான் மாற்று அரசியலா? பதில் கூறுங்கள் முதல்வரே?அடுத்த ஜென்மத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறக்க வேண்டுமென மேடைகளில் வசனம் பேசிக் கொண்டு, 'உண்டி கொடுக்கும்' விவசாயப் பெருமக்களை மனசாட்சிக்குத் தெரிந்தே இப்படி வஞ்சிக்கும் உங்களை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது" என்று குறிப்பிட்டுள்ளார்.நாம் தமிழர் கட்சி கார்த்திகா கோவை சிறையில் இருந்து விடுதலை!BJP Chief Nainar Nagenthran condemns TVK government for arresting farmers