வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

Wait 5 sec.

வங்கக் கடலில் இன்று (அக். 23) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது நாளை (அக். 24) இது தாழ்வு மண்டலமாகவும் நாளை மறுநாள் (அக். 25) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிற அக். 26 ஆம் மேற்கு - மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்பு அதிகம் என்று கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவானால் வங்கதேசம் பரிந்துரைத்துள்ள 'அர்னாப்' என்ற பெயர் சூட்டப்படும். new low-pressure area has formed in the Bay of Bengal