சென்னை உள்பட 10 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு! (அக். 23)

Wait 5 sec.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி, இன்று (அக். 23) பகல் 1 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் பகல் 1 மணிவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. TN Rain update for next 3 hours: Rain likely in 10 districts including chennai