ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் நவீன் சிவகுமார் தங்கம் வென்று அசத்தினார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.இதில், கலந்துகொண்டு பதக்கங்களை வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இந்த நிலையில், பேட்மிண்டன் ஆடவர் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தோனேசிய வீரரை 21 - 9, 21 - 17 என்ற கணக்கில் தமிழக வீரர் நவீன் சிவகுமார் வீழ்த்தி, தங்கம் வென்றார்.முன்னதாக, வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில் நவீன் சிவகுமார் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.Para Asiad: Naveen Sivakumar Wins Badminton Gold