எந்த கோயிலில் என்ன விசேஷம்? அக். 25ல் அன்னாபிஷேகம்!

Wait 5 sec.

திருவாவடுதுறை ஆதீனம் நடத்தும் 23-ஆவது திருமந்திர மாநாடு அக்டோபர் 23 முதல் அக்டோபர் 25 வரை, திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் கோயிலில் காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறும். அதைத் தொடர்ந்து அக்டோபர் 26}ஆம் தேதி மேற்கண்ட கோயிலில் உள்ள ஸ்ரீ திருமூல தேவ நாயனாருக்கு குருபூஜை விழா காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற இருக்கிறது.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், பழமுக்கல் கிராமத்தில் சபாபதி மடத்தில் அமைந்துள்ள, இறைவனோடு கலந்த சூரியனார் சாமி, வெள்ளம்மாள், ஆறுமுகசாமி அருளாசி தரக்கூடிய சித்தர் ஜீவசமாதி திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு விழா அக்டோபர் 25}ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.35 மணிக்கு மேல் 11.35 மணிக்குள் நடைபெற உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார் கோவில் அருகில் 66, கொத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள மீனாட்சி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் அக்டோபர் 25-ஆம் தேதி இரவு 7 மணியளவில் மகா அன்னாபிஷேகம் நடைபெற இருக்கிறது.திருவண்ணாமலை - அவலூர்ப்பேட்டை வழித்தடத்தில், மங்கலத்தை அடுத்த கருமாரப்பட்டியில் அமைந்துள்ள, தவத்திரு ஸ்ரீலஸ்ரீ வெள்ளையானந்த சுவாமிகளின் 14 -ஆம் ஆண்டு குருபூஜை விழா அக்டோபர் 30, 31 (வெள்ளி, சனி) ஆகிய இரண்டு நாள்களில் நடைபெற உள்ளது.