வேளாண் துறையில் 69 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் விஜய்!

Wait 5 sec.

வேளாண் துறையில் 69 பேருக்கு முதல்வர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், வேளாண் துறை அமைச்சர் வினோத் உள்பட அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்ததுடன், 69 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.மேலும், தேசிய அளவில் விருதுகளைப் பெற்ற 4 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.ஸ்வீட் எடு, கொண்டாடு! குழந்தைகள் நாளில் 62.4 லட்சம் மாணவர்களுக்கு கேக் வழங்குகிறது தமிழக அரசு!CM Vijay hands over appointment orders to 69 candidates selected through the TNPSC for the Agriculture Department