இந்தியாவுக்கு 25ஆவது தங்கம்..! ஈட்டி எறிதலில் உலக சாதனை படைத்த ஹானி!

Wait 5 sec.

ஆசிய பாரா விளையாட்டில் இந்திய வீரர் ஹானி ஈட்டி எறிதலில் உலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இத்துடன் இந்தியாவுக்கு 25 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.ஆடவருக்கான ஈட்டி எறிதலில் எஃப் 37/38 பிரிவில் இந்திய வீரர் ஹானி 60.49 மீட்டருக்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்துள்ளார். அத்துடன் 1,116 ராஸா புள்ளிகளையும் பெற்றுள்ளார். ஈரானின் ஹோர்மூஸ் சேடிகஸ்போஞ்சி 50.68 மீட்டருக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கமும் (10009 புள்ளிகள்) சீனாவின் யு செங்ஜியி 53.66 மீட்டருக்கு ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கமும் (943 புள்ளிகள்) வென்றார்கள். எஃப் 37/38 பிரிவுகள் ஒரே போட்டியில் விளையாடுகிறார்கள். அதனால்தான் குறைவான தூரம் வீசிய ஹோர்மூஸ் சேடிகஸ்போஞ்சி வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இன்றை நாளில் மட்டும் இந்தியாவுக்கு இது நான்காவது தங்கம் என்பதும் மொத்தமாக 25ஆவது தங்கப் பதக்கம் என்பதும் நினைவுகூரத்தக்கது.GOLD WITH A WORLD RECORD!Haney creates history with a World Record performance to clinch Gold in the Men’s Javelin Throw F37/38 at #APG2026.#Cheer4Bharat pic.twitter.com/CtTvei26OJ— Doordarshan Sports (@ddsportschannel) October 23, 2026இந்தியாவுக்கு 24ஆவது தங்கம்..! தடகளத்தில் இரண்டு பதக்கம் வென்ற இந்தியர்கள்!Haney creates history with a World Record performance to clinch Gold in the Men’s Javelin Throw