தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே முதலூரில் ஒரு வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை, ஆயுதங்களுடன் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல், அங்கு உறங்கிக் கொண்டிருந்தவர்களை வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டியதில் மேரி ரெஜிலா என்ற பெண் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அவரது கணவர் முத்துகிருஷ்ணன், மகன் பிளசெட் ராஜா ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு மகள்கள் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், சில மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு புகுந்து நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த முதலூர் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (50). இவரது மனைவி மேரி ரெஜிலா (39). இந்த தம்பதியினருக்கு பிளெஸ்ஸி (15), பிரின்ஸா பாப்பா (14) மற்றும் பிளெசெட் ராஜா (10) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், நள்ளிரவில் ஆயுதங்களுடன் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல், அங்கு உறங்கிக் கொண்டிருந்தவர்களை சரமாரியாக வெட்டியதில் மேரி ரெஜிலா என்ற பெண் பலியானார். அவரது கணவர் முத்துகிருஷ்ணன், மகன் பிளசெட் ராஜா ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு மகள்கள் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமிகள் கடத்தப்பட்டார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்கவும், கொலையாளிகளை பிடிப்பதற்கும் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இது குடும்பத் தகராறு காரணமாக நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.இந்த நிலையில், சில மணி நேரத்திற்கு பிறகு சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். வீடு புகுந்து நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.A woman was allegedly killed after unidentified persons broke into a house and attacked a family at Mudalur near Sathankulam in the early hours of Friday, officials said. சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு 5-வது நாளாக தடை!