பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கு வாழைப் பழம் வாங்குவதற்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.பழனி மலைக்கோயிலின் முக்கிய பிரசாதமாக விளங்குவது பஞ்சாமிர்தம். முருகப்பெருமானுக்கு விருப்பமான இந்த பஞ்சாமிர்தம் தேன்,நெய், கரும்புசர்க்கரை, ஏலக்காய் மற்றும் மலைவாழைப்பழம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மலைவாழைப்பழத்தால் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருப்பதோடு, அதிக சுவை கொண்டதாகவும் இருக்கும்.இந்த நிலையில், பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கான வாழைப் பழங்கள் கொள்முதல் செய்வதற்கு அரசு டெண்டர் கோரியுள்ளது.இதன்படி, அடுத்தாண்டு ஜூன் 30 ஆம் தேதி வரையில் பஞ்சாமிர்தம் தயாரிப்புக்குப் பிரிவுக்குத் தேவையான வாழைப் பழங்களை விநியோகம் செய்ய வேண்டும். மேலும், ரூ. 1 கோடி முன் வைப்புத்தொகையுடன் ஒப்பந்தக் காலம் முழுவதும் ஒப்புக்கொண்ட விலையில் மட்டுமே வாழைப் பழங்களை வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 26 ஆம் தேதிக்குள் டெண்டரை சமர்ப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.ஸ்வீட் எடு, கொண்டாடு! குழந்தைகள் நாளில் 62.4 லட்சம் மாணவர்களுக்கு கேக் வழங்குகிறது தமிழக அரசு!The Tamil Nadu government has invited tenders for the supply of bananas for the production of Pazhani Panchamirtham