ஆசிய பாரா விளையாட்டில் ரிகர்வ் வில்வித்தையில் இந்தியாவின் ஹரிவிந்தர் சிங், விஜய் சுந்தி இணைந்து தங்கம் வென்றுள்ளார்கள். இன்றைய நாளில் (அக்.23) முதல் தங்கம் இதன் மூலம் கிடைத்துள்ளது. ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.ஆடவருக்கான இரட்டையர் ரிகர்வ் வில்வித்தையில் இந்தியாவின் ஹரிவிந்தர் சிங், விஜய் சுந்தி சீனாவின் யூன் டியோ அண்ட் ஜாவோ லீஸுக்கே உடன் இறுதிப்போட்டியில் மோதினார்கள். இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் 5-1 என்ற கணக்கில் சீன வீரர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்தார்கள். இதன் மூலம் இந்தியாவுக்கு 22ஆவது தங்கம் கிடைத்துள்ளது. தமிழக வீரர் நவீன் சிவக்குமார் இதனைத் தொடர்ந்து பாட்மின்டனில் தங்கம் வென்று அசத்தினார். இத்துடன் இந்தியாவுக்கு 23 தங்கம், 29 வெள்ளி, 41 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. இன்றைய நாளின் முதல் பதக்கமாக தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளி வென்றார். முதல் தங்கமாக ஹரிவிந்தர் சிங், விஜய் சுந்தி இணைந்து வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.GOLD FOR INDIA!Harvinder Singh & Vijay Sundi strike GOLD in the Para Recurve Men’s Doubles event at #APG2026, bringing glory to the nation. #Cheer4Bharat pic.twitter.com/3eHgARHUQ2— Doordarshan Sports (@ddsportschannel) October 23, 2026பாட்மின்டனில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன்!Harvinder Singh & Vijay Sundi strike GOLD in the Para Recurve Men’s Doubles event