சிரித்து, சிரித்து சீன் கதையைக் கேட்டேன்: சூர்யா

Wait 5 sec.

நடிகர் சூர்யா சீன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இப்படம் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவான சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவ. 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நஸ்ரியா, நஸ்லன் உள்பட பிரபலங்கள் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் நேற்று (அக். 25) நடைபெற்றது. இதில், நடிகர்கள் சூர்யா, நஸ்ரியா, நஸ்லன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா, ”ஜித்து மாதவனுடன் பணியாற்ற வேண்டும் என ஆசை எழுந்தபோது சரியாக அதற்கான வாய்ப்புகளும் இணைந்தன. கதை கேட்கும்போது நான் அமைதியாகவே கேட்பேன். ஆனால், ஜித்து சீன் கதையைச் சொல்ல, சொல்லவே சிரித்துக்கொண்டுதான் கேட்டேன். ரோமஞ்சம், ஆவேஷம் திரைப்படங்களைப் போல் இதிலும் ஒரு உலகத்தை உருவாக்கியுள்ளார். கருப்பு, விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் திரைப்படம் உங்களுக்குப் பிடித்தது போல் இப்படமும் பிடிக்கும். ழகரம் நிறுவனத்தின் முதல் திரைப்படம் இது. உங்களின் ஆசிர்வாதமும் அன்பும் வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார். 12 ஆண்டுகள் கழித்து... நஸ்ரியா பேச்சு!Actor Suriya spoke about the film 'Seen' at its music launch event.