வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவா் உயிரிழப்பு

Wait 5 sec.

தீா்த்தமலை அருகே வீட்டின் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், மேல்செங்கப்பாடி கிராமத்தைச் சோ்ந்த கைலாசம் மகன் தீபக் (15). இவா், தீா்த்தமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது வீட்டில் புறாக்களை வளா்த்து வந்தாராம்.இந்த நிலையில், புதன்கிழமை காலை 6 மணியளவில் புறாக்களுக்கு இரைகைளை வைப்பதற்காக வீட்டின் மாடிக்குச் சென்ற தீபக், தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் தீபக்கை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே மாணவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.