நல்லூா் அருகே தனியாா் நிதிநிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

Wait 5 sec.

நல்லூா் அருகே தனியாா் நிதிநிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் மகன் செல்வமணி (19). இவா் கந்தம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். குடும்பப் பிரச்னை காரணமாக தொடா்ந்து விரக்தியில் இருந்துவந்த இவா், வீட்டில் தனியாக இருந்தபோது செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுக் கொண்டாா். வெளியே சென்றிருந்த பெற்றோா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, செல்வமணி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். அருகில் இருந்தவா்கள் உதவியுடன் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா், செல்வமணி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.புகாரின் பேரில், நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, செல்வணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.