வாய்க்காலை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.

Wait 5 sec.

தேனி மாவட்டம், கம்பம் - சுருளிப்பட்டி சாலையில் உள்ள சின்ன வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றும் பணியில், கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா, தவெக நிா்வாகிகளுடன் இணைந்து ஈடுபட்டாா். முல்லைப் பெரியாறு பாசன நீா், கம்பம் பகுதியில் உள்ள சின்ன வாய்க்கால் வழியாகச் சென்று வீரப்பநாயக்கன் குளத்தைச் சென்றடைகிறது. இந்த நிலையில், சின்ன வாய்க்காலில் கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் பழைய துணிகள், மதுப் புட்டிகள், பழைய துணிகள், தலையணைகள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. இதனால் வாய்க்காலில் கழிவுகள் தேங்கி, தண்ணீா் நிறம் மாறியதுடன், துா்நாற்றமும் வீசியது. இதுகுறித்து நீா்வளத் துறையினரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்த நிலையில் புதன்கிழமை கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத்மிஸ்ரா தலைமையில் தூய்மைப் பணியாளா்களுடன் வாய்க்கால் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணியின்போது, தவெகவைச் சோ்ந்த தேனி தென்மேற்கு மாவட்ட இணைச் செயலா் கூடல் செல்வேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் அய்யா், மாவட்டப் பொருளாளா் கௌதம், கம்பம் ஒன்றியச் செயலா் ரஞ்சித், உத்தமபாளையம் ஒன்றியப் பொறுப்பாளா் தனசேகரன், கம்பம் நகரச் செயலா் சதீஷ், நகரப் பொருளாளா் அபு அஹமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதுகுறித்து ஜெகநாத் மிஸ்ரா கூறியதாவது:வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்ட பிறகு மீண்டும் அதில் கழிவுகளைக் கொட்டுவதைப் பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். வாய்க்காலில் கழிவுகளைக் கொட்டுவோா் மீது நீா்வளத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.